வெளிநாட்டில் ஈழத்தமிழ் இளைஞனுக்கு திருமணமான ஆறு மாதங்களில் நேர்ந்த துயரம்
காதல் திருமணம் செய்து ஆறு மாதங்களில் முல்லைத்தீவு இளைஞர் மலேசியாவில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அன்ரனி யதுசன் வயது 23 என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பஸ்தர் ஆறு மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துள்ளார் .
தனது குடும்ப சூழ்நிலை காரணமாக மலேசியாவுக்கு தொழில் வாய்ப்பை பெற 22 தினங்களுக்கு முன்னர் அங்கு சென்றதாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் மலேசியாவில் விபரீத முடிவால் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.