மதுப்பிரியர்கள் அதிர்ச்சி; நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் ஆணையர் தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் அனல்பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.