ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் (12) நிறைவடையும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள், செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெற்றன.
அன்று வாக்களிக்க முடியாமல் போன தபால் மூல வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்வதற்கான மேலதிக நாட்களாக நேற்றும் (11), இன்றும் (12) ஒதுக்கப்பட்டன.
வாக்காளர்கள் தமது மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது தமது பணியிடங்களுடன் தொடர்புடைய பிரதேச செயலகத்திற்கோ சென்று வாக்கினைப் பதிவு செய்யலாம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டெம்பர் 21ஆம் திகதி உட்பட இந்த 2 நாட்களுக்குப் பின்னர் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் இனி வழங்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.