நல்லூர் உற்சவ கால வியாபாரிகளுக்கு உதவிக்கரம்!
நல்லூர் உற்சவ காலத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மிக வறுமையான சூழலில் உள்ள வியாபாரிகளுக்கு உதவுவதற்கு தியாகி ஐயா முன்வந்துள்ளார்.
நல்லூர் உற்சவ காலம் ஆரம்பமாகியுள்ள இச்சூழலில், நாட்டின் அசாதாரண சூழல் காரணமாக உற்சவ கால வியாபார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவ்வாறான வருமானங்களையே நம்பியுள்ள, வறுமையான சிறிய வியாபாரிகளின் குடும்பங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இந்நிலையில் அவ்வாறான சிறிய வியாபாரிகளின் துயர் துடைக்க தியாகி அறக்கொடை நிலையத்தின் நிறுவுநர் தியாகி ஐயா முன் வந்துள்ளார்.
எனவே இவ்வாறான வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் மிக வறுமையான சூழலில் உள்ள வியாபாரிகள் தாங்கள் தொடர்ச்சியாக நல்லூர் உற்சவ காலத்தில் இவ்வாறான வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் எதிர்வரும் 2ஆம் திகதி தியாகி அறக்கட்டளை நிறுவனத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த வருடமும் நல்லூர் உற்சவ காலங்களில் இவ்வாறான வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வரிப்பணங்களை கூட செலுத்த முடியாமல் பல்வேறுபட்ட வறுமை நிலை கொண்ட வியாபாரிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.