பொது மன்னிப்பில் 350 கைதிகள் விடுவிப்பு

பொது மன்னிப்பில் 350 கைதிகள் விடுவிப்பு

இலங்கையில் கைதிகள் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பில் 350 சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொது மன்னிப்பில் 350 கைதிகள் விடுவிப்பு | 350 Prisoners Freed In Amnestyஇதன்படி நாளை (12) , சிறு குற்றங்களுக்குத் தண்டனை அனுபவித்து வரும் 350 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அதேசமயம் கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்றைய தினம் விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது