வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லையா?

வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லையா?

தபால் திணைக்களத்தின் ஊடாக இதுவரையில் 10 மில்லியனுக்கும் அதிக வாக்காளர் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க நேற்று (10) தெரிவித்தார்.

மீதமுள்ள வாக்காளர் அட்டைகள் அடுத்த சில நாட்களில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வாக்காளர் அட்டை விநியோகத்தை எதிர்வரும் 14ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 14ஆம் திகதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள், அடையாள அட்டையுடன் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்கு சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி தங்களது வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

தேர்தல் நடைபெறும் தினம் வரையில் வாக்காளர்களுக்கு சந்தர்ப்பம் வாக்காளர் அட்டைகளை பெறுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.