நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் கன மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் கன மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன் போது, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழச்சி பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது காற்றானது (40-50) கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் கன மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை | Today Weather Forecast In Tamil Sri Lanka

இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.