உக்கிரமடையும் காசா போர்: இஸ்ரேல் எல்லையில் அதிர்ச்சி சம்பவம்

உக்கிரமடையும் காசா போர்: இஸ்ரேல் எல்லையில் அதிர்ச்சி சம்பவம்

மூன்று இஸ்ரேலிய (Israel) பாதுகாப்புப் படையினர் மேற்குக் கரைக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான எல்லைக் கடவையில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் தரப்பில் நடந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், ஜோர்டானில் இருந்து லொறியில் வந்த தீவிரவாதி ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் தொடர்புடைய தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உக்கிரமடையும் காசா போர்: இஸ்ரேல் எல்லையில் அதிர்ச்சி சம்பவம் | Gaza War Escalates

இதனிடையே, ஜோர்டான் தரப்பில் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், எல்லைக் கடக்கும் பாதை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட சாரதி தெற்கு ஜோர்டானில் உள்ள செல்வாக்குமிக்க ஹுவைதாட் பூர்வகுடி சமூகத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.