முற்றாக அழியப் போகின்றதா ஆண் இனம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

முற்றாக அழியப் போகின்றதா ஆண் இனம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆண் இனமே அழிந்து போகும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு பெண் கருத்தரித்த 12 வாரங்களில் பாலினத்தை நிர்ணயிக்கும் பகுதியான Y குரோமோசோமின் முதன்மை மரபணு ஆண் இனப்பெருக்க உறுப்புகளை உருவாக்குவதற்கு மரபணு பாதையை செயல்படுத்துகிறது.

இந்த மரபணு மற்றொரு முக்கிய மரபணுவான SOX9 தூண்டுவதன் மூலம் செயல்படுகிறது இது இந்த குழந்தை ஆணாக வளர்வதை உறுதி செய்கிறது

அந்தவகையில், இந்த Y க்ரோமோசோம் குறைந்து வருவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

அதாவது, கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் Y குரோமோசோம் அதன் சொந்த 1438 மரபணுக்களில் 1393 ஐ இழந்துவிட்டதாக மரபியல் பேராசிரியரான ஜெனிபர் ஏ. மார்ஷல் கிரேவ்ஸ் தெரிவித்துள்ளார்.

முற்றாக அழியப் போகின்றதா ஆண் இனம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் | The Y Chromosome Is Disappearingமீதமுள்ள மரபணுக்களும் இன்னும் 10 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலும் இழந்துவிடலாம் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகையால், 10 மில்லியன் அண்டுகள் கழித்து முழுவதுமாக ஆண்கள் இனம் அழிந்துவிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வுக்கு ஜப்பானில் நடத்தப்பட்ட ஸ்பைனி எலி குறித்த ஆராய்ச்சி ஆறுதல் அளித்துள்ளது.

அதாவது, Y க்ரோமோசோம் இல்லாத ஸ்பைன் எலியின் ஆண் பாலினத்தை மீட்டெடுக்க ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அதில் Y க்ரோமோசோம் நகர்ந்து மற்ற க்ரோமோசோம்களுடன் இணைந்தது தெரியவந்துள்ளது.

முக்கியமாக குரோமோசோம் 3 ல் உள்ள SOX9 மரபணுவுக்கு அருகில் உள்ள டிஎன்ஏ நகல் இது ஆண்களிடம் மட்டும் உள்ள மரபணு அத்தோடு இது பெண்களிடம் இல்லாதது.

முற்றாக அழியப் போகின்றதா ஆண் இனம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் | The Y Chromosome Is Disappearingஅதனால் காணாமல் போன Y குரோமோசோமின் SRY மரபணுவின் பங்கை இது எடுத்துகொள்கிறது இதனால் Y க்ரோமோசோம் இல்லையென்றாலும் கூட அந்த இனத்தை அழியவிடாமல் தடுப்பதற்கு வழி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இன்னும் மனிதர்களுக்கு இது செயல்படுத்திப் பர்க்கவில்லை என்பதால் எதையும் இறுதியாக சொல்லிவிட முடியாது எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒருவேளை 10 மில்லியன் ஆண்டுகளுக்கு பின் ஆண் இனம் அழிந்துவிட்டால் அது மனித இனம் அழிவதற்கான முக்கிய புள்ளி என அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.