காதலனுடன் வெளியே செல்ல ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை தரும் நிறுவனம்!

காதலனுடன் வெளியே செல்ல ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை தரும் நிறுவனம்!

தாய்லாந்தில் உள்ள ஒயிட்லைன் குரூப் என்ற மார்கெட்டிங் நிறுவனம் தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு (Tinder Leave) வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

2024 ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாதங்களுக்கு இந்த டிண்டர் விடுப்பைப் பயன்படுத்தி ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

காதலனுடன் வெளியே செல்ல ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை தரும் நிறுவனம்! | Company Gives Employees Paid Leave To Go On Dating

தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் கூறியதை அடுத்து அந்நிறுவனம் இந்த முடிவை அறிவித்துள்ளது.

காதல் செய்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும், இது உற்பத்தியை அதிகரிக்க உதவும் என அந்நிறுவனம் நம்புகிறது.