நான்கு பாடசாலை மாணவர்கள் மாயம்

நான்கு பாடசாலை மாணவர்கள் மாயம்

நுவரெலியா, நோர்வூட் வென்சர் தோட்டத்தில் வசிக்கும் நான்கு பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 15 வயதுடைய நான்கு பாடசாலை மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

நான்கு பாடசாலை மாணவர்கள் மாயம் | Four School Students Missingமாணவர்கள் நால்வரும் நேற்று புதன்கிழமை (04) வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை மாணவர்களின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.