கரைச்சி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இருவர் கொழும்பில் இருந்துவந்த அதிகாரிகளால் கைது!

கரைச்சி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இருவர் கொழும்பில் இருந்துவந்த அதிகாரிகளால் கைது!

 கொம்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வருமான உதவியாளர்கள் இருவர் இன்று (03) கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வருமான வரி உத்தியோகத்தர்கள் இருவரும் இலஞ்சம் வாங்குவதாக ஆணைக்குழுவுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

கரைச்சி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இருவர் கொழும்பில் இருந்துவந்த அதிகாரிகளால் கைது! | Karaichi Pradeshiya Officials Arrested Bribery

அந்த தகவலுக்கு அமைய கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் குறித்த வருமான வரி உத்தியோகத்தர்கள் இருவரையும் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு உத்தியோகத்தர்களும் ஆணைக்குழு அதிகாரிகளால் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக கரைச்சி பிரதேச சபையின் செயலாளருடன் தொடர்பு கொண்ட போது கைது செய்யப்பட்டதனை உறுதிப்படுத்திய அவர் மேலதிக தகவல் எதனையும் வழங்கவில்லை என கூறப்படுகின்றது.