சீனாவில் பாடசாலை மாணவர்கள் மீது மோதிய பேருந்து: 11 பேர் பலி

சீனாவில் பாடசாலை மாணவர்கள் மீது மோதிய பேருந்து: 11 பேர் பலி

கிழக்கு சீனாவில் (East China) நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷான்டாங் மாகாணத்தில் உள்ள தையான் நகரில் உள்ள ஒரு நடுநிலைப் பாடசாலையின் வாயிலில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதி உள்ளது.

உயிரிழந்தவர்களில் 5 பாடசாலை மாணவர்களும், 6 பெற்றோரும் உள்ளடங்குகின்றனர். மேலும், காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 12 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பாடசாலை மாணவர்கள் மீது மோதிய பேருந்து: 11 பேர் பலி | 11 People Died When The Bus Hit The Students

விபத்துக்குள்ளான பேருந்து மாணவர்களை பாடசாலைக்கு ஏற்றிச் செல்வதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.