38 நாட்டினருக்கு இலவச விசா ; அமைச்சரவை தீர்மானம்
இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது 38 நாடுகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றில் இன்று (03.09.2024) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.