ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞரை ஈவிரக்கமின்றி தாக்கிய இராணுவ வீரர்கள்

ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞரை ஈவிரக்கமின்றி தாக்கிய இராணுவ வீரர்கள்

பண்டாரவளை, ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி, குழப்பத்தில் ஈடுபட்ட எட்டு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில் நிலைய அதிபரால், பண்டாரடவளை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய தியத்தலாவை இராணுவ முகாமியில் சேவையாற்றும் இராணுவவீரர்கள், அவர்கள் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞரை ஈவிரக்கமின்றி தாக்கிய இராணுவ வீரர்கள் | Army Soldiers Mercilessly Assaulted A Tamil Youth

நேற்றிரவு 8.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் பண்டாரவளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலைய அலுவலக கடமையின் நிமித்தம் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ரயிலில் இருந்து இறங்கியுள்ள குறித்த இராணுவவீரர்கள், பாடல் பாடியுள்ளதுடன், கூச்சல் சத்தமும் எழுப்பியுள்ளனர்.

ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞரை ஈவிரக்கமின்றி தாக்கிய இராணுவ வீரர்கள் | Army Soldiers Mercilessly Assaulted A Tamil Youth

இதன்போது இவ்விடயத்தில் விழுந்திருந்த பணப் பையை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு இளைஞர் ஒருவர் சென்றபோது தமிழ் இளைஞன் பணம் களவாடியுள்ளார் என்று கூறி அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலைய அதிபரும், அங்கிருந்தவர்களும் தாக்குதலை தடுக்க சென்றவேளை, அவர்கள்மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டு, இராணுவத்தினர் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் பண்டாரவளை ரயில் நிலைய அதிபர் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஆகியோரால் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் இரு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினரால் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் கைதான இராணுவத்தினர் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.