சுவிஸ் நாட்டவர்களுக்கு வெளியான நற்செய்தி

சுவிஸ் நாட்டவர்களுக்கு வெளியான நற்செய்தி

சுவிட்சர்லாந்தில் (Switzerland) உள்ள ஓய்வூதியர்களுக்கான தொகை சதவிகிதம் அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை சுவிட்சர்லாந்து அரசு அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

அதாவது, சுவிட்சர்லாந்தில், 2025ஆம் ஆண்டு முதல், முதுமை மற்றும் இயலாமை ஓய்வூதியம், 2.9 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது.

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 35 சுவிஸ் ஃப்ராங்குகளாக அதிகரித்து 1,260 சுவிஸ் ஃப்ராங்குகளாக அளிக்க உள்ளது.

சுவிஸ் நாட்டவர்களுக்கு வெளியான நற்செய்தி | Swiss Pensions Child Allowances Increase From 2025

இதேவேளை, குழந்தைகளுக்கான நிதி உதவியும் அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நிதியுதவி, 200 சுவிஸ் ஃப்ராங்குகளிலிருந்து 215 சுவிஸ் ஃப்ராங்குகளாகவும், கல்விக்கான நிதி உதவி, மாதம் ஒன்றிற்கு, 250 சுவிஸ் ஃப்ராங்குகளிலிருந்து 268 சுவிஸ் ஃப்ராங்குகளாகவும் அதிகரிக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.