அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு....! சரியான முடிவு எடுங்கள் : எச்சரிக்கும் எம்.பி

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு....! சரியான முடிவு எடுங்கள் : எச்சரிக்கும் எம்.பி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் 15 இலட்சத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) அரசியல் அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த வஜிர அபேவர்தன, வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்பதற்காக உழைக்கும் போது ஜனாதிபதி அரச ஊழியர்களை மறக்கவில்லை.

அரச இயந்திரத்தின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி நன்கு உணர்ந்துள்ளார். அதனால்தான் கடந்த காலத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக வழங்கப்பட்டது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு....! சரியான முடிவு எடுங்கள் : எச்சரிக்கும் எம்.பி | Government Employee Salary Increment Election 2024

மேலும், 2025 முதல் மாதாந்தம் 25000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அது மாத்திரமன்றி, அரசாங்க ஊழியரின் ஆரம்பச் சம்பளம் 24% அதிகரிக்கப்படவுள்ளது, வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் மொத்த சம்பளமாக 55000 ரூபா வழங்கும் இலக்கை அடைய இருப்பதாக ஜனாதிபதியின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினரும் பல்வேறு முன்மொழிவுகளையும் வாக்குறுதிகளையும் உள்ளடக்கியிருந்தாலும், அந்த வாக்குறுதிகள் யதார்த்தமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

எனவே, அரசு இயந்திரம் கவனமாக செயற்படாவிட்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். 2019 இல், அரசு ஊழியர்கள் அந்த தவறை செய்தார்கள். மீண்டும் அந்த தவறை அவர்கள் செய்யக் கூடாது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு....! சரியான முடிவு எடுங்கள் : எச்சரிக்கும் எம்.பி | Government Employee Salary Increment Election 2024

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் கொள்கை பிரகடனத்தை முன்வைத்துள்ளார்.

எனவே, அரசு ஊழியர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். 38 வேட்பாளர்களில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட, அனுபவம் உள்ள, நாட்டைப் பாதுகாக்கக் கூடிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இணையான தலைவர் யாரும் இல்லை.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் என்னை தோற்கடித்தாலும் பரவாயில்லை. ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்காதீர்கள். அவரைத் தோற்கடித்தால் முழு நாடும் அழிந்துவிடும். சிலிண்டருக்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 15 இலட்சத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பினைப் பயன்படுத்தும் போது சரியான முடிவை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.