துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட 62 வயதான தாயின் சடலம் ; நடந்தது என்ன..

துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட 62 வயதான தாயின் சடலம் ; நடந்தது என்ன..

நன்னேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பயிரிக்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நன்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்

நன்னேரியா, பயிரிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவரது கணவர் பல வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் இவரது பிள்ளைகள் வேறொரு பகுதியில் வேலை செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட 62 வயதான தாயின் சடலம் ; நடந்தது என்ன? | Body Of 62 Year Old Mother Recovered Foul Smell

 

சடலமாக மீட்கப்பட்ட தாயாரின் மகன் தனது தாயின் தொலைப்பேசிக்கு பல முறை அழைப்பு விடுத்துள்ள நிலையில் தாயிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால் தாயின் அயல் வீட்டாளருக்கு இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த அயல் வீட்டாளர் குறித்த தாயின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்துள்ளதுடன் வீட்டிற்குள் துர்நாற்றம் வீசியுள்ளது.

துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட 62 வயதான தாயின் சடலம் ; நடந்தது என்ன? | Body Of 62 Year Old Mother Recovered Foul Smell

 

அயல் வீட்டாளர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த வீட்டினை சோதனையிட்டு பார்த்த போது வீட்டினுள் இருந்து தாயாரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலத்தின் அருகே இருந்து ஒரு கோடரியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நன்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.