பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நண்பனை காப்பாற்ற சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நண்பனை காப்பாற்ற சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவின் போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொழில்நுட்பவியலாளரான கிருலப்பனை சித்தார்த்த வீதியில் வசித்த பாஸ்கரன் என்ற 22 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பதினைந்து பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இரவு பிறந்தநாள் விழாவின் போதே இத் துயரம் நிகழ்ந்துள்ளது.

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நண்பனை காப்பாற்ற சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி | Young Man Save Friend During Birthday Celebration

இதில் நீரில் மூழ்கிய பிறந்தநாள் கொண்டாடிய இளைஞனைக் காப்பாற்றச் சென்ற மற்றுமொரு இளைஞனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் உள்ளிட்ட சிலர் கடலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதன்போது நீரில் மூழ்கிய இளைஞனை காப்பாற்ற சென்ற இளைஞர்கள் மத்தியில் இந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.