இளைஞர்கள் இந்த முறை சரியான முடிவை எடுக்க வேண்டும் – ரணில்

இளைஞர்கள் இந்த முறை சரியான முடிவை எடுக்க வேண்டும் – ரணில்

சவால்களை எதிர்கொள்வதற்கு வெற்றிகரமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு தளமாக பயன்படுத்துமாறு நாட்டின் இளைஞர்களுக்கு ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த காலங்களை விட இன்று இளைஞர்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர் எனக் கூறினார்.

இலங்கை ஏன் வளர்ச்சியடையவில்லை, அரசியல்வாதிகள் ஏன் அதிக நன்மைக்காக ஒன்றிணைக்க முடியாது என்பது போன்ற பல கேள்விகள் மக்களின் மனதில் உள்ளன.

இருப்பினும் இப்போது நாடு கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அச்சுறுத்தலை எதிர்கொள்வது மட்டுமல்லாமல் பொருளாதார சரிவின் விளிம்பிலும் உள்ளது என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பல இளைஞர்கள் வாக்களித்தனர், இருப்பினும் அவர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஆகவே இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.