யாழில் விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு

யாழில் விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு

  யாழ்ப்பாணத்தில் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வடமராட்சி புலோலி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.

கடந்த 21 ஆம் திகதி  புலோலி பகுதியில் இடம்பெற்ற வான் - துவிச்சக்கர வண்டி விபத்தில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

யாழில் விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு | Person Accident In Yali Was Death

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.