கனடாவில் பாடகர் ஸ்ரீநிவாஸை நோக்கி முட்டை வீச்சு

கனடாவில் பாடகர் ஸ்ரீநிவாஸை நோக்கி முட்டை வீச்சு

கனேடியத் தமிழர் பேரவை வருடந்தோறும் “தமிழர் தெருவிழா” எனும் நிகழ்வினை நடத்தி வருகின்ற நிலையில், இம்முறை 10ஆவது வருடமாகக் கடந்த 24ஆம் திகதி மற்றும் 25ஆம் திகதிகளில் குறித்த விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் இம்முறை கனேடியத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் மக்கள் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என கனடாவில் உள்ள சில தமிழ் அமைப்புகளும், தமிழ் செயற்பாட்டாளர்களும் கனடா வாழ் தமிழ் மக்களைக் கோரியிருந்தனர். 

“தமிழர் தெருவிழா” வழமை போல அல்லாது இம்முறை முதன்முதலாக மாபெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. 

இதேவேளைத் தென்னிந்தியாவிலிருந்து நிகழ்விற்கு வருகை தந்திருந்த பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ் பாடிக் கொண்டிருந்தபோது எதிர்ப்பாளர்கள் முட்டைகளை வீசி எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். 

இதன் காரணமாக நிகழ்வு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்ததுடன், அங்கிருந்த காவல்துறையினர் அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் தற்போது வெளியாகியுள்ளது.