உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு இலங்கையின் மெரோன் விஜேசிங்க தகுதி
பெருவின் லிமா நகரில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2024 இல் ஆடவர் 100 மீற்றர் போட்டியில் இலங்கையின் கனிஷ்ட ஓட்டப்பந்தய வீரர் மெரோன் விஜேசிங்க அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
நேற்றிரவு (28.08.2024) நடைபெற்ற ஹீட் 4 போட்டியில் 10.55 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த 19 வயதான அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
நைஜீரியாவைச் சேர்ந்த ஒகோன் இஸ்ரேல் 10.48 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார்.
இம்முறை 13 இலங்கை வீர வீராங்கனைகள் 2024 ஆம் ஆண்டு பெருவின் லிமாவில் நடைபெற்ற உலக கனிஷ்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.