வெளிநாட்டில் மலர்ந்த காதல்; காதலியை தேடி இலங்கை வந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வெளிநாட்டில் மலர்ந்த காதல்; காதலியை தேடி இலங்கை வந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கை காதலியை பார்வையிட வந்த இந்திய பிரஜையான காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று மல்வானே பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அரேபிய நாடான துபாய்க்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைபெண் , அங்கு வேலை இந்திய வாலிபர் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார்.

வெளிநாட்டில் மலர்ந்த காதல்; காதலியை தேடி இலங்கை வந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Love Blossomed Abroad Boyfriend Arrested Sri Lanka

சம்பவத்தில் மல்வானே – வல்கம பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவர் சுமார் ஒன்றரை வருடங்களாக துபாயில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண் கடந்த ஜூன் 20ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு திரும்பினார். பெண்ணின் காதலனான இந்திய பிரஜையும் அவருடன் இலங்கைக்கு வருகை தந்து மல்வானே– வல்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், தன்னை திருமணம் செய்யவுள்ள இந்திய பிரஜையால் பிரச்சினை மற்றும் துன்புறுத்தல்கள் ஏற்படுவதாக பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பெண்ணையும் அவரது காதலனான இந்திய பிரஜையையும் பொலிஸார் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது இலங்கையில் தங்கியிருந்த காதலனின் விசா செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 15 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை அவர் விசா நீடிப்பை பெற்றிருந்த நிலையில் அக் காலப்பகுதி முடிவடைந்த நிலையிலும் காதலன் இலங்கையில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இந்திய பிரஜையை கைது செய்த பொலிஸார், அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.