இன்று முதல் இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இன்று முதல் இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 06 வரை சூரியன் நேரடியாக இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைகளுக்கு மேலே இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

நாளை (28) மதியம் 12.11 மணியளவில் டெல்ஃப்ட் தீவு, பூனேரி, தட்டுவன்கொட்டி மற்றும் சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று முதல் இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! | Sri Lanka S Weather Will Change From Tomorrow

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இன்று முதல் இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! | Sri Lanka S Weather Will Change From Tomorrow

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.