நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி (kandy) மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (27) பலதடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்டுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (26.08.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்புமாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்தகாற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று: பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Heavy Rain With Thunder Weather In Tamil

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.