நாட்டில் பரவும் நோய்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் பரவும் நோய்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இரத்தினபுரி, காலி, கேகாலை, மாத்தறை, களுத்துறை, மொனராகலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் அதிக ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது அவசியமாகும் என சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.நாட்டில் பரவும் நோய்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warning Issued Regarding Spread Of Rat Fluமேலும், இந்த நாட்களில் தசை வலி, தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறுவது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.