உலகின் 2ஆவது பெரிய வைரம் கண்டுபிடிப்பு
உலகின் இரண்டாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடாவைச் சேர்ந்த Lucara Diamond Corp நிறுவனத்தின் கெய்ரோ சுரங்கத்தில் 2,492 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1905ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட் கல்லினன் (Cullinan) வைரத்திற்குப் பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும்.
போட்ஸ்வானா தலைநகர் கபரோனில் இருந்து 500 கிலோ மீற்றர் தொலைவில் Cairo சுரங்கம் உள்ளது.
முன்னதாக 2019ஆம் ஆண்டில், இதே சுரங்கத்தில் 1,758 காரட் செவாலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை பிரெஞ்சு பேஷன் நிறுவனமான Louis Vuitton வாங்கியது.
ஆனால், அதன் விலையை வெளியிடவில்லை.
முன்னதாக 2017ஆம் ஆண்டில், போட்ஸ்வானாவின் கெய்ரோ சுரங்கத்தில் 1,111 காரட் லெசிடி லா ரோனா வைரம் கண்டுபிடிக்கப்பட்டது, இதை ஒரு பிரிட்டிஷ் நகைக்கடைக்காரர் ரூ.444 கோடிக்கு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.