தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கொடூரம்

தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கொடூரம்

  மட்டக்களப்பு , காத்தான்குடி நாவற்குடாவில் நேற்றிரவு 10 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இரு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய மரியதாஸ் என்பவரே வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் .

தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கொடூரம் | The Brutality Of The Family In The Tamil Area

குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் நாவற்குடாவிலுள்ள சாரதா வீதியால் வந்து கொண்டிருந்த போது இனந்தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.