ரயில் கடவை கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ரயில் கடவை கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கொஸ்கொட மஹா இந்துருவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் இன்று (19) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் கொஸ்கொடவில் இருந்து விறகு ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரயில் கடவை கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு | One Person Died In The Accident

இந்த விபத்தில் லொறியில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில், இந்துருவ பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.