கொழும்பில் பயங்கரம்; தொழிலாளியை அடித்துக்கொன்ற முதலாளி

கொழும்பில் பயங்கரம்; தொழிலாளியை அடித்துக்கொன்ற முதலாளி

கொழும்பு , வெள்ளவத்தை விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் முதலாளியால் தாக்கப்பட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் பயங்கரம்; தொழிலாளியை அடித்துக்கொன்ற முதலாளி | Colombo The Boss Who Beat Up The Old Man

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொலை செய்யப்பட்டவர் விற்பனை நிலையம் ஒன்றில் தொழிலாளியாக கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், விற்பனை நிலையத்தின் முதலாளிக்கும் கொலை செய்யப்பட்டவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவரது சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , சந்தேக நபரான 42 வயதுடைய விற்பனை நிலையத்தின் முதலாளி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.