ஜனாதிபதி தேர்தலில் மேலும் மூன்று எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் மேலும் மூன்று எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு

ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றம் பிரவேசித்த மூன்று உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு(Ranil Wickremesinghe) ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்

இதன்படி அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் மேலும் மூன்று எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு | Three More Mps Support Ranil

சற்று முன்னர் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.