வெளிநாடொன்றில் வேலைவாய்ப்பு: வெளியான முக்கிய அறிவிப்பு

வெளிநாடொன்றில் வேலைவாய்ப்பு: வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் (Israel)  வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆட்சேர்ப்புக்கான முன்னோடி பரீட்சைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் நிர்மாணத் துறையில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை1500 இற்கும் அதிகமானோர் தொழில்களில் இணைந்து சம்பளம் பெறவுள்ளதாகவும், பரீட்சைகளுக்காக ஏற்கனவே பெருமளவானோர் வருகை தருவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கட்டுமானத்துறையில் 25-44 வயதுக்குட்பட்ட அனுபவமுள்ள ஆண் தொழிலாளர்கள் பரீட்சைகளில் நேரடியாக பங்குபற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் வேலைவாய்ப்பு: வெளியான முக்கிய அறிவிப்பு | High Paying Jobs Abroad Announced In Israel

அதற்கமைய, இந்த வேலைகள் தொடர்பான நேர்முக பரீட்சை ஓகஸ்ட் 15 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் மொரட்டுவ கடுபெத்தவில் உள்ள NAITA கல்வியகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரீட்சை நுழைவுக்கட்டணமாக 6000 ரூபாய் அறவிடப்படும் எனவும், விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள், கடவுச்சீட்டுடன் வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.