
திருகோணஸ்வரர் ஆலய அருகாமையில் கைக்குண்டு மீட்பு
திருகோணமலை கோணஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் கைக் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை அரச புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இன்று காலை குறித்த கைக் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செயலிழக்கப்பட்ட நிலையில் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை செயலிழக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.