இடியுடன் கூடிய மழை ; வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை ; வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின் படி, அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பாகங்களிலும் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று (11) 10 மில்லிமீற்றர் மழை பெய்ய உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிடுள்ளது.

இடியுடன் கூடிய மழை ; வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு | Thunderstorms Notice Of Department Of Meteorology

அதிகபட்சமாக 75 கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலின் அபாயத்தைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.