தேர்தல் ஆணைக்குழு தொடர்பில் போலி இணையதளம்

தேர்தல் ஆணைக்குழு தொடர்பில் போலி இணையதளம்

தேர்தல் ஆணைக்குழுவின் இணைய தளத்திற்கு நிகரான போலி இணய தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த போலி இணைய தளம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கணனி அவசர பதிலளிப்பு பிரிவினால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் இணைய தளத்தினை ஒத்த வகையில் இந்த போலி இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு தொடர்பில் போலி இணையதளம் | Fake Web Site Regarding The Election Commissionஇந்த விடயம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஸ்ட பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்துள்ளார்.