ஒரே நாளில் 55,078 பேருக்கு கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு 16 இலட்சமாக அதிகரிப்பு

ஒரே நாளில் 55,078 பேருக்கு கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு 16 இலட்சமாக அதிகரிப்பு

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை வரையிலான 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 இலட்சத்து 36 ஆயிரத்து 870 ஆக அதிகரித்துள்ளதுடன் கடந்த இரு நாள்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 5 இலட்சத்து 45 ஆயிரத்து 318 போ் சிகிச்சையில் உள்ளத்துடன் 10 இலட்சத்து 57 ஆயிரத்து 805 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட தகவல்படி, ஜூலை 30 ஆம் திகதி நிலவரப்படி ஒரு கோடியே 88 இலட்சத்து 32 ஆயிரத்து 970 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் 779 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 266 பேரும்  கா்நாடகத்தில் 83 பேரும், ஆந்திரத்தில் 68 பேரும் , உத்தர பிரதேசத்தில் 57 பேரும், மேற்கு வங்கத்தில் 46 பேரும் அடங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.