புத்தளத்தில் முச்சக்கர வண்டியுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்து

புத்தளத்தில் முச்சக்கர வண்டியுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்து

புத்தளம் மாம்புரி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியொன்றுடன் மோதூண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் நேற்று(07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நால்வர் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் அங்கிருந்தவர்களினால் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் கொண்டுச் சென்றுள்ளனர்.

புத்தளத்தில் முச்சக்கர வண்டியுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்து | Motorcycles Collide With Three Wheeler In Puttalam

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பேரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நால்வரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி மாம்புரி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புத்தளத்தில் முச்சக்கர வண்டியுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்து | Motorcycles Collide With Three Wheeler In Puttalam

இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நுரைச்சோலைப் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Gallery

GalleryGalleryGallery