ஒன்லைன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்த இருவர் கைது

ஒன்லைன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்த இருவர் கைது

கொழும்பில் இணையம் மூலம் பொருட்களை கொள்வனவு செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஒன்லைன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்த நிலையில், அதற்குரிய பணத்தை செலுத்தாத இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, 20, 24 வயதுடைய இளைஞர்கள் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வாரியபொல மற்றும் சுனந்தபுர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பல்வேறு பொருட்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளர். 

மடிக்கணனி, கைத்தொலைபேசி, தங்க நகைகள் உட்பட பல பொருட்கள் இவ்வாறு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. 

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.