100 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார் நோவா லைல்ஸ்
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர் போட்டித் தூரத்தை 9.784 வினாடிகளில் நிறைவு செய்து இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
குறித்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை ஜமைக்காவின் கிஷான் தொம்ப்சன் (Kishane Thompson) வென்றுள்ளதுடன், அவர் போட்டித் தூரத்தை 9.789 வினாடிகளில் நிறைவு செய்தார்.
அமெரிக்காவின் ஃப்ரெட் கேர்லி (Fred Kerley) போட்டித் தூரத்தை 9.81 வினாடிகளில் நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.