குவைத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் வெளியான முக்கிய் அறிவிப்பு!

குவைத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் வெளியான முக்கிய் அறிவிப்பு!

குவைத் நாட்டில் கடந்த 2 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டினால் குறித்த குழுவினர் நேற்று (03) இரவு விடுவிக்கப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குவைத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் வெளியான முக்கிய் அறிவிப்பு! | Sri Lankans Arrested In Kuwait Released

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

‘எதேர அபி’ என்ற அமைப்பினால் நடத்தப்படவிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திரச்சாப்பா லியனகே, சமனலி பொன்சேகா, ஜோலி சியா, உபேகா நிர்மானி உள்ளிட்ட 26 பேர் குவைத் பொலிஸாரால் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இசை நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி பெறாததால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குவைத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் வெளியான முக்கிய் அறிவிப்பு! | Sri Lankans Arrested In Kuwait Releasedஇதனடிப்படையில், பாடகர்களைத் தவிர, இசை நிகழ்ச்சிக்கு வந்த இசைக்குழுவினர் மற்றும் அதனை ஏற்பாடு செய்தவர்கள் என பலரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இசைக்கருவிகளை கைப்பற்றப்பட்டுள்ளன.

இருப்பினும், குவைத்தில் உள்ள  இலங்கை தூதரக அதிகாரிகளின் தலையீட்டின் பேரில், இவர்களில் 24 பேர் நேற்றிரவு விடுவிக்கப்பட்டதாகவும், ஏற்பாட்டுக் குழுவில் இருவர் இன்னும் பொலிஸ் காவலில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.