வரி வருமானத்தை இழந்து வரும் இலங்கை: சவாலாக மாறியுள்ள இணைய வளர்ச்சி

வரி வருமானத்தை இழந்து வரும் இலங்கை: சவாலாக மாறியுள்ள இணைய வளர்ச்சி

இணையம் மூலமான கெசினோ சந்தையின் விரைவான வளர்ச்சியின் காரணமாக இலங்கை கணிசமான வரி வருமானத்தை இழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பல இளைஞர்கள் சர்வதேச அளவில் ஒழுங்குபடுத்தப்பட்ட பல்வேறு பந்தய தளங்களை அணுகுவதால், இந்த நிலையில் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சக தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

ரூபாய் அடிப்படையிலான இணைய சூதாட்ட விடுதிகள் உட்பட குறைந்தபட்சம் 10 சர்வதேச உரிமம் பெற்ற சூதாட்ட தளங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களை கவர்ந்து வருகின்றன.

இலங்கையில் உள்ள சட்ட கட்டமைப்பும், இந்த நில அடிப்படையிலான சூதாட்ட விடுதிகளை அனுமதிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சூதாட்டத் துறையில் இருக்கும் குறைந்தபட்ச முதலீட்டு வரம்புகள் மற்றும் கட்டண கட்டமைப்புகளில் திருத்தங்கள் தேவைப்படுவதாக ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

வரி வருமானத்தை இழந்து வரும் இலங்கை: சவாலாக மாறியுள்ள இணைய வளர்ச்சி | Sl S Gambling Growth Impacted By The Internetஇதன்படி குறைந்தபட்ச முதலீடு 250 மில்லியன் டொலர் பெறுமதியைக் கொண்ட திட்டங்கள் சூதாட்ட உரிமக் கட்டணம் மற்றும் புதுப்பித்தல் கட்டணமாக 31 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் என விளக்கமளித்துள்ளார்.

மேலும், 500 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்ட திட்டங்கள், 15.5 மில்லியன் டொலர்கள் என்ற சூதாட்ட உரிமக் கட்டணத்தையும் 31 மில்லியன் டொலர்கள் என்ற புதுப்பித்தல் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவு் அவர் கூறியுள்ளார்.