மொட்டு கட்சியின் அதிரடி தீர்மானம்!

மொட்டு கட்சியின் அதிரடி தீர்மானம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மொட்டு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தை பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு ஏகமனதாக எடுத்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க மொட்டு கட்சியின் ஒரு தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.

அது தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொட்டு கட்சியின் அதிரடி தீர்மானம்! | Another Action Resolution Of The Budding Party  இதேவேளை, குறித்த அறிக்கை தொடர்பில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த கருத்து தெரிவிக்கும் போது,''சாகர காரியவசம் எந்த கடிதம் அனுப்பினாலும் அஞ்சப்போவதில்லை, ஜனாதிபதி இந்த நாட்டுக்கு ஆற்றிய சேவையினால் தான் நாங்கள் தீர்மானங்களை எடுத்தோம்.''என தெரிவித்துள்ளார்.