சென்னை - யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை : வெளியான அறிவிப்பு
சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நாளாந்த விமான சேவையை இண்டிகோ நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.
இலங்கையில் இதுவரை கொழும்புக்கு மட்டுமே விமான சேவை காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்துக்கான விமான சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இதேவேளை இம்மாதம் முதலாம் திகதி முதல் விமானத்திற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்து வருகை தருகின்ற நிலையில் இவ் ஆண்டு ஜூன் மாதம் 25.2 (28,631) சதவீதமானர்களும், 2023 ஆம் ஆண்டு 26.7 (26,830) சதவீதமானர்களும் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
எனவே அதிகளவானவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதற்கு ஆர்வமாகவுள்ள நிலையில், சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையேயான விமானப் பயணத்திற்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதையும் இது பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.