ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு 2 லட்சம் இலவச காண்டம்கள்!

ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு 2 லட்சம் இலவச காண்டம்கள்!

விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு கருதி பல ஆண்டுகளாக ஒலிம்பிக் கமிட்டி இலவசமாக வீரர், வீராங்கனைகளுக்கு காண்டம் வழங்கி வருகிறது. அதன்படி பாரீஸ் ஒலிம்பிக்கில் வீரர், வீராங்கனைகளுக்கு 2,30,000 காண்டம்களை ஒலிம்பிக் கமிட்டி வழங்கியுள்ளது .

இந்த ஆண்டு  பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 160 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு 2 லட்சம் இலவச காண்டம்கள்! | 2 Lakh Free Condoms For Olympic And Athletesபல்வேறு நாடுகளிலிருந்து வரும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் நடைபெறும் நாட்களில் உடலுறவு கொள்வார்கள். இதனால் வீரர்களின் பாதுகாப்பு கருதி பல ஆண்டுகளாக ஒலிம்பிக் கமிட்டி இலவசமாக காண்டம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர் வீராங்கனைகள் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்பதற்காக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு 2 லட்சம் இலவச காண்டம்கள்! | 2 Lakh Free Condoms For Olympic And Athletesஅப்போது வீரர்களுக்கு காண்டம் வழங்குவதை ஒலிம்பிக் கமிட்டி  நிறுத்தி வைத்தது. இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் இல்லை என்பதால் வீரர் வீராங்கனைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாரீஸ் ஒலிம்பிக்கில் வீரர், வீராங்கனைகளுக்கு 2,30,000 காண்டம்களை ஒலிம்பிக் கமிட்டி வழங்கியுள்ளது. அதில் 2 லட்சம் ஆணுறைகளும், 20 ஆயிரம் பெண்ணுறைகளும் 10 ஆயிரம் ஓரல் காண்டம்களும் அடங்கும்.

அதேவேளை வீரர்கள் வீராங்கனைகளுக்கு எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்கள் தங்கள் நாட்டுக்கு சென்று மற்றவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தான் காண்டம் வழங்கப்படுவதாக ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.