
விலை திருத்தம் தொடர்பில் லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
ஓகஸ்ட் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் நிலவிய விலையிலேயே, ஓகஸ்ட் மாதமும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு 3,680 ரூபாவிற்கும், 5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு 1,477 ரூபாவிற்கும், 2.3 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 591 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, லிட்ரோ நிறுவனத்தின் விலைகளிலும் இம்மாதம் திருத்தம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.