நாட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ள மின்னணு கடவுச்சீட்டு குறித்து அமைச்சர் விளக்கம்

நாட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ள மின்னணு கடவுச்சீட்டு குறித்து அமைச்சர் விளக்கம்

இலங்கையில் முதல் மின்னணு கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு தயாராகும் வகையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதியில் மின்னணு கடவுச்சீட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் பல தொழில்நுட்ப மற்றும் சிக்கல்களை நிவர்த்தி செய்யவேண்டியுள்ளது.

இந்தநிலையில் நாள்தோறும் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை 1000ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் அவசர பயணத் தேவைகளைக் கொண்டவர்களுக்கு குடிவரவுத் திணைக்களம் கடவுச்சீட்டுகளை வழங்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ள மின்னணு கடவுச்சீட்டு குறித்து அமைச்சர் விளக்கம் | E Passport To Be Introduced In The Country Soonry

இதற்கிடையில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளில் 30 வீதம் மாத்திரமே பயன்படுத்தப்பட்டதாகவும், மீதமுள்ளவை பாதுகாப்பிற்காக பெறப்பட்டதாகவும் அமைச்சர் அலஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதிக்குள் மின்னணு கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்குள் மின்னணு கடவுச்சீட்டு அமைப்பு தயாராகவில்லையெனில், விண்ணப்பதாரர்களுக்கு சாதாரண கடவுச்சீட்டுக்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.