பால்மா விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு

பால்மா விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

பால்மா விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு | Milk Powder Price In Sri Lankaமேலும் நுகர்வோருக்கு தேவையான சலுகைகளை வழங்குவதற்கு இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.