யாழில் அதிர்ச்சி சம்பவம்... வீட்டினுள் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஓய்வு நிலை அதிபர்!

யாழில் அதிர்ச்சி சம்பவம்... வீட்டினுள் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஓய்வு நிலை அதிபர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியில் தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் மயிலங்காடு வீதி புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த 68 வயதான வேலாயுதர் பாலசுப்பிரமணியம்  என்பவரே இவ்வாறு இன்றையதினம் (31-07-2024) சடலமாக மீட்கபட்டுள்ளார்.

யாழில் அதிர்ச்சி சம்பவம்... வீட்டினுள் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஓய்வு நிலை அதிபர்! | Dead Body Retired President Living Alone Jaffna

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் மனைவியை பிரிந்து கடந்த 10 ஆண்டுகள் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும், அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

குறித்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்து விட்டு வீட்டை விட்டு சென்றவர்கள் தமது பொருட்களை எடுப்பதற்கு வீட்டுக்கு வந்த வேளை குறித்த நபர் நிர்வாண நிலையில் வீட்டினுள் சடலமாக காணப்பட்டார்.

யாழில் அதிர்ச்சி சம்பவம்... வீட்டினுள் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஓய்வு நிலை அதிபர்! | Dead Body Retired President Living Alone Jaffnaஅவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜேயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சடலமானது மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.