வெளிநாட்டில் கணவன்... தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண்!

வெளிநாட்டில் கணவன்... தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண்!

முல்லைத்தீவில் உள்ள ஒட்டுசுட்டான் நகர பகுதியில் கிணற்றில் இருந்து இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் இன்றையதினம் (29.07.2024) காலை இடம்பெற்றுள்ளது.வெளிநாட்டில் கணவன்... தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண்! | Young Family Woman Rescued Dead Well In Mullaitivu

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணை நேற்றிரவு தொடக்கம் காணவில்லையென வீட்டார் மற்றும் அயலவர்கள், கிராமத்தவர்கள் இணைந்து தேடியுள்ளனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை

இவ்வாறான நிலையில் இன்று (29.07.2024) காலை வீட்டு கிணற்றுக்குள் இருந்து சடலமாக இருப்பதை அவதானித்த குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

வெளிநாட்டில் கணவன்... தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண்! | Young Family Woman Rescued Dead Well In Mullaitivu

இச் சம்பவத்தில் 30 வயதுடைய டெனிஸ்குமார் தெரினா என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் திருமணமான பின்பு கணவருடைய வீட்டில் மாமன் மாமியுடன் வசித்து வந்ததாகவும் அவருக்கு 5 வயதுடைய ஒரு மகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் புலம்பெயர் நாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

உடலம் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.